அமெரிக்காதான் எனது அதிகாரப்பூர்வ இருப்பிடம்: இளவரசர் ஹாரியின் கருத்துக்களால் குழப்பம்

0
38

பிரிட்டன் இளவரசரும் “சசெக்ஸ் டுயூக்” பட்டத்தை தாங்கியவருமான ஹாரி அமெரிக்காவை தன்னுடைய அதிகாரப்பூர்வ இருப்பிடமாக அறிவித்துள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இதனால் இவரசர் ஹாரி, பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதன் ஆரம்ப கட்டமாக இது கருதப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் வசித்து வந்தபோதும் பிரிட்டனை தனது வீடு என குறிப்பிட்டுவரும் ஹாரி பாதுகாப்பு காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளதையும் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்போது தன்னுடைய அதிகாரப்பூர்வ இருப்பிடமாக அவர் அறிவித்துள்ளமையானது பெரும் குளப்பத்தை பிரிட்டன் வாழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

காரணம் இளவரசர் ஹாரியை அனைத்து நாட்டு மக்களும் விரும்பும் ஒரு மனிதராக காணப்படுகின்றார். அவர் பிரிட்டன் குடும்பத்தில் அங்கம் வகிப்பதை அனைவரும் விரும்புகின்றனர்.

இது தொடர்பில் பிரபல பேஜ் சிக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,

அமெரிக்காவில் குடியுரிமை பெறும் எண்ணமும் இளவரசர் ஹாரிக்கு உண்டு என செய்தி வெளியிட்டுள்ளது. அவரே தனது வாழ்க்கை பற்றி எழுதியுள்ள ‘ஸ்பேர்’ நூலில் போதை பொருள் எடுத்துக் கொண்டது பற்றி குறிப்பிட்டுள்ளது அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதை சிக்கலாக்கும்.