தனது ஆசை மகளுக்கு காரை பரிசளித்துள்ள நடிகர் கொட்டாச்சி!

0
349

மறைந்த நடிகர் விவேக் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கொட்டாச்சி. இவர் நடித்த பல்வேறு திரைப்பட காமெடிகள் சூப்பர் ஹிட் ஆகி இன்றளவும் மக்கள் மறக்காத ஒரு நடிகராக இருக்கிறார்.

தற்போது அவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் வருவதில்லை, ஆனால் அவரது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார்.

மானஸ்வி, இமைக்கா நொடிகள், தர்பார், சித்திரை செவ்வானம், மாமனிதன், டிடி ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

மானஸ்விக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிறந்தநாள் வந்தது. அவரின் பிறந்தநாளுக்கு அனைவரும் வாழ்த்து கூறி வர நடிகரும், அவரது அப்பாவுமான கொட்டாச்சி மகளுக்காக புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கொட்டாட்சி வாங்கிய இந்த கார் ரூ. 13 லட்சம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.