ஜனாதிபதியை சந்தித்தார் பசில்!

0
126

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று (04) பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பிலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இதற்கு முன்னர் இரண்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. 

இதில் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.