இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்பில் மற்றுமொரு சர்சைக் கருத்து வெளியாகியுள்ளது. சிறுவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட வானில் நீதிமன்ற நடவடிக்கைக்குச் சென்றதாகவே குறித்த சர்சை கருத்து வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹலியவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட வான் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமையவே இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த வான்களில் குழந்தைகளை தவிர கைதிகளை ஏற்றி சொல்ல கூடாது என்பதோடு, வாகனத்தை சிறை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, சிறை ஆணையாளரும் இந்த நிபந்தனையை மீறியுள்ளதாகத் தெரிவித்து, இரகசிய பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.