கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

0
143

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா எடுத்த தீர்மானம், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க வட்டி விகிதங்கள் குறித்த அந்நாட்டு மத்திய வங்கி முடிவெடுப்பதற்கு சில நாட்களுக்கு முன் சந்தையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.74 டொலர்களாகவும், வெஸ்ட் டெக்சாஸ் ( (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.03 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

எனினும், முன்னதாக கச்சா எண்ணெய் விலை 4 மாதங்களில் இல்லாத அளவில் உச்சத்தை எட்டியிருந்தது.

சவுதி அரேபியா மற்றும் ஈராக் கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைத்தமை, சீனா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்த நேர்மறையான தகவல்கள் இதற்குக் காரணமாக அமைந்ததாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்யா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மார்ச் மாதம் முதல் நாளொன்றுக்கு 200,000 பீப்பாய்கள் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.