ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது இரண்டு ஆண்டுகளை கடந்து தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த போரின் போது வேகுவம் வகை குண்டுகளை வீசி எண்ணற்ற வீரர்களை கொன்றுள்ளோம் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகை குண்டுகள் சுற்றுப்புறத்தில் உள்ள பிராணவாயுவை ஈர்த்து அதன் தொடர்ச்சியாக ஒரு குண்டுவெடிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில்,
ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்கை சொய்கு உடனான சந்திப்பின்போது, ரஷ்ய ராணுவ படைகளின் துணை தலைவர் கூறும்போது, 300 வீரர்கள் வரை போரில் இந்த வகை குண்டுகள் வீசி கொல்லப்பட்டுள்ளனர். வான்வழியே நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலை அடுத்து, அவர்கள் உயிரிழந்தனர் என கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.