பத்திரிகையாளர்கள் சந்திப்பில் “திராட்சை ரசம் என்ற பெயரில் யேசுவும் குடித்துள்ளார்” என விஜய் ஆண்டனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திருந்த நிலையில் அதுதொடர்பில் தற்போது அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தது.
“அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம். நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, 2000ம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான். தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது.
இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறி இருந்தேன். ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை.
நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” என தெரிவித்துள்ளார்.