விண்ணுக்கு ஏவப்பட்ட அசுர ராக்கெட்: உலகிலேயே மிகப்பெரியது இதுதான்!

0
177

உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ரொக்கெட் தெற்கு டெக்சாசின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று முன்தினம்(14) விண்ணில் ஏவப்பட்டது.

உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம், பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் இந்த ரொக்கெட்டை அமைத்துள்ளது.

இரண்டு முறை தோல்வி

சுமார் 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ரொக்கெட் இரண்டு முறை சோதனைகளில் தோல்வியடைந்ததது. இந்நிலையில் குறித்த ரொக்கெட் நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதுடன் மீண்டும் பூமியில் இந்திய பெருங்கடலில் இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நோக்கங்கள்

எனினும் இறுதி இலக்கை அடைவதற்கு முன்பே ரொக்கெட் தொடர்பை இழந்து கீழ்-நிலை பூஸ்டர் வெற்றிகரமாக நீரில் தரையிறங்குவதில் தோல்வியடைந்துள்ளது.

எவ்வாறாயினும் ஸ்டார்ஷிப்பின் மூன்றாவது ஏவுகணை சோதனையில் அதன் பல நோக்கங்களை பூர்த்தி செய்ய முடிந்ததாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.