ஏவிய சில நொடிகளில் வெடித்து சிதறிய ஜப்பானின் தனியார் விண்கலம்

0
102

ஜப்பானில் தனியார் நிறுவனம் ஒன்று ஏவிய விண்கலம் சில நொடிகளில் வெடித்து சிதறியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தால் குறித்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து குறித்த விண்கலம் ஏவப்பட்டது. ஆனால் விண்கலம் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென்று நடுவானில் வெடித்து சிதறியது.

தோல்வியில் முடிந்த முயற்சி
விண்கலம் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் ஜப்பானில் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்றின் விண்கலத்தை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஜப்பானில் விண்கலத்தை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெற்றிருக்கும்.