சிவனொலிபாதமலையில் சேரும் தொன் கணக்கு பிளாஸ்திக் போத்தல்கள்..!

0
150

 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையான சிவனொளிபாத மலை பருவகாலம் ஆரம்பமாகி 3 மாதங்களில் மூன்று தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிகரிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்துள்ளதாவது,

சிவனொளிபாத மலையில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் யாத்திரீகர்களால் போடப்பட்டவைகளாகும்.

யாத்திரைக்கான மார்க்கத்தில் செல்லும் யாத்திரீகர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வெளியேற்ற குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சில யாத்திரீகர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சுற்றுச்சூழலில் வீசுகிறார்கள்.

குப்பைகளை அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் உணவு பொருட்களை அப்புறப்படுத்துமாறு பிரதேச சபையினால் அறிவுறுத்தப்பட்டாலும் அதனை யாத்திரீகர்கள் பின்பற்றுவதில்லை.

சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் நல்லதண்ணி குப்பை சேகரிக்கும் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தனியாருக்கு விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக நல்லதண்ணி பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண நீர் வழங்கல் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.