அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மீண்டும் கட்சியை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைய ஏழு பிரிவுகளாக செயற்படும் கட்சியின் உறுப்பினர்களை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிளவுகளுக்கான உண்மை நிலவரங்களை அடையாளம் கண்டு, அதனை சரியும் நடவடிக்கையை பசில் முன்னெடுத்து வருகிறார்.
பொதுஜன பெரமுன
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் பண்டார மற்றும் ஜயந்த கட்டகொட ஆகியோருக்கு, ஒன்றிணையக்கூடிய நபர்களுடன் கலந்துரையாடுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான டலஸ் அழகப்பெரும குழு, விமல் வீரவன்ச உள்ளிட்டோர், மைத்திரிபால சிறிசேன, பிரசன்ன ரணதுங்க, நிமல் லான்சா, நாமல் ராஜபக்ச, நாலக கொடஹேவா போன்றோர் 7 பிரிவுகளாக உடைந்துள்ளனர்.
இது பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதனை சரி செய்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ள ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.