7 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்! அமெரிக்காவில் பரபரப்பு

0
158

அமெரிக்காவில் கடந்த 7 ஆண்டுகளாக இளம்பெண்ணொருவரை வீட்டிற்கு அடைந்து வைத்திருந்த நிலையில் பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இங்ஸ்டர் பகுதியில் மோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

குறித்த மோட்டலின் அறை ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. இதனை கவனித்த மிச்சிகன் பொலிஸார் உடனடியாக சென்று அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது அங்கு இளம் பெண் ஒருவர் இருந்துள்ளார்.

அங்கே துப்பாக்கி, போதை பொருட்கள் மற்றும் பல செல்போன்கள் கிடந்துள்ளன. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் பொலிஸார் அனுமதித்தனர்.

7 ஆண்டுகளுக்கு முன், 2017-ம் ஆண்டில் குறித்த இளம்பெண் காணாமல் போயுள்ளார். அவரை பொலிஸார் தேடி வந்த நிலையில் மீட்டுள்ளார். அவருடைய குடும்பத்தினர் தகவலறிந்து வந்து இளம்பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர்.

இது தொடர்பில் மிச்சிகன் மாகாண பொலிஸ் அதிகாரியான லெப்டினன்ட் மைக் ஷா கூறும்போது,

ஒரு பெண் அழுவது போன்ற அலறல் சத்தம் கேட்டது. அதனால், குறிப்பிட்ட பகுதிக்கு நாங்கள் சென்றோம். மோட்டலின் கதவு பூட்டியிருந்தது. அதனை உடைத்து, உள்ளே சென்றோம் என கூறினார்.