மின்சார தொடருந்தில் இலங்கை மக்கள் செல்வார்கள்: அனுர குமார

0
173

தனது ஆட்சியின் கீழ் இந்த நாட்டு மக்கள் மின்சார தொடருந்து யுகத்தை உறுதி செய்வார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் இராணுவத்தின் கண்டி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் புதிய சகாப்தம் ஆரம்பிக்கப்படுவதோடு ஏமாற்றப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களை, நம்பிக்கை இழந்த இளைஞர்களை, எதிர்காலம் இல்லாத குழந்தைகளை, மருந்து இல்லாத நோயாளிகளை ஏமாற்ற தமக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.