பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞன் ஒருவர் தனது காதலியுடன் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞன் ஒருவர் தனது காதலியுடன் தங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட ஹோட்டலுக்கு செலுத்துவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பணத்தை திருடியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அம்பாறை பேருந்து நிலையத்தில் யுவதியை நிறுத்திவிட்டு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்து குறித்த இளைஞன் பணத்தை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து யுவதியின் பெற்றோரை வரவழைத்து பேருந்து நிலையத்தில் வைத்து கடுமையாக எச்சரித்து பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.