திருமணம் அவசியமில்லை! பிடித்த ஆணுடன் Living together இல் இருக்கலாம்!: வித்தியாசமான பழக்கம் கொண்ட பழங்குடியினர்

0
150

நகர்ப்புறங்களைப் பொறுத்தவரையில் லிவ் – இன் ரிலேஷன்ஸிப்பில் (Living together) இருப்பதில் அவ்வளவு ஆச்சரியம் இல்லை. ஆனால் அதுவே கிராமப்புறத்தில் இந்த கலாசாரம் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமான விடயம்தான்.

அந்த வகையில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மலைப்பகுதிகளில் வாழும் ‘கராசியா’ என்ற பழங்குடியினப் பெண்கள் திருமணத்துக்கு முன்பே லிவ் – இன் ரிலேஷன்ஷிப்பிற்கு தயாராகிறார்கள். இதிலிருந்து அவர்களுக்கு பிடித்த ஆணை கணவனாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்த பழங்குடியினரில் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து குழந்தைகளையும் பெற்றுக் கொள்கின்றனர். இந்த கிராமத்தில் தங்களுக்கு பிடித்த ஆண் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு.

இங்கு நடைபெறும் ஒரு நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கூடி அவர்கள் விரும்பும் ஒருவருடன் தனியாக வாழத் தொடங்க முடிவெடுக்கிறார்கள்.

அதன் பின்னர் ஊர் திரும்பிய பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்கள் விரும்பினால் திருமணம் செய்யாமல் பிரிந்தும் செல்லலாம்.

பல வருடங்களுக்கு முன்பு இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் வேறொரு இடத்துக்குச் சென்றுள்ளனர். அவர்களில் மூன்று பேர் இந்திய மரபின்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் ஒருவர் மட்டும் திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணுடன் லிவ் – இன் இல் இருந்துள்ளார். அந்த மூன்று சகோதரர்களுக்கும் குழந்தைகள் இல்லை எனவும் நான்காவது சகோதரருக்கு மட்டும் குழந்தை இருந்ததால் அப்போதிலிருந்து அங்கு லிவ் – இன் வழக்கம் தொடங்கியதாக கூறப்படுகிறது.