கல்வியியல் கல்லூரி மாணவர்களின் உணவுக் கொடுப்பனவு அதிகரிப்பு..

0
153

கல்வியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைக்கு கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ஐயாயிரம் ரூபா உணவுக்கான கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. 

அதிகரித்துள்ள விலையேற்றம் காரணமாக குறித்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கல்வி அமைச்சு, அடுத்த மாதம் தொடக்கம் உணவுக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகரிக்கும் கொடுப்பனவு

அதன்படி, அடுத்த மாதம் முதல் குறித்த கொடுப்பனவானது, மூவாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு மாதாந்த உணவுக்கொடுப்பனவாக எட்டாயிரம் ரூபாவை கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.