நடந்தே சென்று ஒரே நாளில் சுற்றிப் பார்க்கக்கூடிய நாடு எது தெரியுமா?

0
172

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் பல மயில் தூரம் நடத்து சென்று தங்கள் உறவினர்களை சந்திப்பது வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். காரணம் அப்போது போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை.

ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது தொலைதூர நாடுகளுக்கு கூட சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். இது சிறிய நாடாக இருந்தாலும் சுதந்திர நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. சொந்த நாணயம், கலாச்சாரம், வரலாறு என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ஆனால் ஒரு நாட்டை நடந்து சென்று சுற்றிப்பார்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. அது மிகவும் அழகான நாடு, ஆல்ப்ஸ் மலையின் அழகு, பச்சை போர்வை போத்தியது போல எங்கு திரும்பினாலும் பசுமை என எழில் கொஞ்சும் காட்சிகள். இங்கு பழமையான கோட்டைகளும் உள்ளன.

 ஐரோப்பாவின் 4வது சிறிய நாடு

இது சிறிய நாடாக இருந்தாலும் சுதந்திர நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. சொந்த நாணயம், கலாச்சாரம், வரலாறு என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதுவே உலகின் 6 வது சிறிய நாடு என்று அறியப்படுகிறது. இந்த நாட்டை ஒரே நாளில் கால் நடையாகவே சுற்றி பார்க்க முடியுமாம்.

இந்த நாட்டின் பெயர் லிச்சென்ஸ்டீன். இதன் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் சுவிட்சர்லாந்தும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் ஆஸ்திரேலியாவும் அமைந்துள்ளது. இதன் தலை நகரம் வடூஸ். இங்கு அனைவரும் ஜெர்மன் மொழி பேசுகின்றனர்.

இது ஐரோப்பாவின் 4வது சிறிய நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதன் வடக்கு முனையிலிருந்து தெற்கு முனை வரை வெறும் 15 மயில்கள் தூரம் மட்டுமே உள்ளன. இதேபோல கிழக்கு முனையிலிருந்து மேற்கு முனையிலான தூரம் வெறும் 2.50 மைல்கள் மட்டுமே ஆகும். இங்கு சுமார் 40,000 மக்கள் வசிக்கின்றனர்.

இந்த நாட்டில் சுவிஸ் பிராங்க் நாணயம் பயன்படுத்தப்படுகிறது. லிச்சென்ஸ்டீன் சுவிட்சர்லாந்தில் இருந்து ரையின் நதியால் பிரிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நாட்டின் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.