இலங்கையில் காதலர் தினத்தில் கோடிக்கணக்கான ரூபாவிற்கு ரோஜாப்பூ விற்பனை

0
206

இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வருமானம் அதிகரிப்பு

நாட்டின் மலர் விற்பனை நிலையங்களில் சிகப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு ரோஜா மலர்கள் கடந்த 13ஆம் திகதி மாலையிலிருந்து விற்பனை செய்யப்பட்டதாகவும் ரோஜா பூக்களுக்கு அதிக அளவு கிராக்கி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனி ஒரு ரோஜா மலர் 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், ரோஜா மலர் கொத்து 3000 முதல் 6000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரோஜாப்பூ விற்பனையில் சுமார் 1200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரோஜா பூக்கள், மலர் செண்டுகள், டெடி பேர் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு அதிகளவானவர் நாட்டம் காட்டியதாகவும் டெடி பேர் பொம்மைகள் 500 முதல் 1500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.