ஐபோன் 16 சீரிஸ் குறித்த பல தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். மேலும் ப்ரோ மேக்ஸ் மொடல் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.
அதாவது, ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஐபோன் 16 சீரிஸை நீருக்கடியிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சம் ‘Underwater Mode’ என்ற பெயருடன் வருகிறது. இந்த புதிய அம்சத்தினால் பயனர்கள் நீருக்கடியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக எடுக்க முடியும்.
இன்டர்வாட்டர் யூசர் இன்டர்ஃபேஸ் ‘inter-water user interface’ இந்த ஐபோன் 16 சீரிஸில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதில் பெரிய பட்டன்கள், ஸ்ட்ரீம்லைன் மெனு, ஹார்ட்வேர் பட்டன்கள் போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
இந்த ஐபோனை தண்ணீரில் பயன்படுத்த பயனர்கள் வால்யூம் பட்டனை பயன்படுத்தி வீடியோ அல்லது புகைப்படத்தை ஜூம் செய்யவோ அல்லது ஜூமை வெளியே எடுக்கவோ முடியும். இந்த செயல்பாடானது ஐபோன் 16 மொபைலில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.