ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான நகரங்களில் அமைந்துள்ள மருந்தகங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நீதி நடவடிக்கையுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பல்வேறு நோய்களுக்காக சில மருந்தகங்களால் வழங்கப்படும் போதை மாத்திரைகளை உபயோகிக்கப் பழகிவிட்டதால், மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்க முயல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒவ்வொரு மருந்தகங்களிலும் பாதுகாப்பு கேமரா அமைப்பினை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.