உலகப் புகழ்பெற்ற நைஜீரியாவைச் சேர்ந்த மறைந்த மதபோதகரான டிபி ஜோசுவா (TB Joshua) மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள், சுமத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதபோதகர் டிபி ஜோசுவா பாதிக்கப்பட்டவர்களினாலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சர்வதேச ஊடகமொன்று மேற்கொண்ட விசாரணையிலேயே இந்த விடயம் அம்பலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.