2024 திருமதி அழகு ராணி போட்டியில் பங்கேற்கும் இலங்கைப்பெண்!

0
240

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகு ராணிகளுக்கான 2024 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துஷாரி ஜெயக்கொடி பங்கேற்கவுள்ளார்.

உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (21) முதல் 25ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற உள்ளது.

அண்மையில் நடைபெற்ற இலங்கை திருமணமான அழகிப்போட்டியின் 50 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் போட்டியில் வெற்றி பெற்று இந்தப் போட்டியில் பங்குபற்றத் இவர் தகுதி பெற்றுள்ளார்.