போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்து – கைப்பற்ற தயாராகும் அரசாங்கம்

0
117

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது.

கஹதுடுவ, மூனமலேவத்தை, தெஹிவளை கடற்பரப்பு மற்றும் பாணந்துறை அலோபோமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமான இந்த சொத்துக்களை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள்

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பூரண மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கையுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அசங்க என்ற பிரதான போதைப்பொருள் வியாபாரி சம்பாதித்த 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கஹதுடுவ மூனமலேவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள குடு அசங்கடவுக்கு சொந்தமான பெரிய இரண்டு மாடி வீடு, 3 மாடி கட்டிடம், 2 காணி, சொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், தங்க நகைகள் என்பன அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்து - கைப்பற்ற தயாராகும் அரசாங்கம் | Drug Smugglers Property In Sri Lanka

இதற்கிடையில், பாணந்துறை அலோபோமுல்ல பகுதியில் முன்னணி போதைப்பொருள் வியாபாரி பிங்கி உள்ளிட்ட நால்வரை கைது செய்த பொலிஸார், பிங்கி என்ற போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமான சொத்துக்களை அரசுக்கு சுவீகரித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சொத்துக்களில் 4 நவீன வாகனங்கள், மூன்று மாடி வீடு, கட்டிடம் மற்றும் பல சொத்துக்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில் தெரியவந்த விடயம்

இதேவேளை, தற்போது டுபாய் நாட்டில் தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பசிக் என்பவர் முதலீடு செய்த பல கோடி ரூபா பெறுமதியான தெஹிவளை கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சொகுசு சுற்றுலா ஹோட்டலை கையகப்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்து குவிப்பு பிரிவினர் நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தெஹிவளை கடற்பரப்பில் அமைந்துள்ள இந்த சொகுசு உணவக ஹோட்டலை முன்னாள் அரசியல்வாதி ஒருவரால் நடத்துவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டுபாயில் மறைந்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு பணத்தை முதலீடு செய்து இந்த ஹோட்டலை நிர்மாணித்து மிகவும் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மற்றும் கைப்பற்றப்படவுள்ள சொத்துக்களின் பெறுமதி இதுவரை துல்லியமாக கணக்கிடப்படவில்லை எனவும், சொத்தின் தோராயமான பெறுமதி 100 கோடி ரூபாவை தாண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.