ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ரூ. 20 கோடிக்கு அதிகமாக வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பெற்றுள்ளார் .
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 19) துபாயில் நடைபெறவுள்ளது. இதில் உலகக்கோப்பையில் ஜொலித்த வீரர்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மொத்தம் 1,116 வீரர்கள் பதிவு
துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 1,116 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் தகுதியின் அடிப்படையில் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளார்கள். அதிகபட்சமாக 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வீரர்
ஐபிஎல் ஏலத்தில் சுமார் ரூ. 10 கோடி வரைக்கும் வாங்கப்படுவார் என்று நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா கணிக்கப்பட்டிருந்தார்.
அவரை ரூ. 1.80 கோடிக்கு வாங்கி சென்னை அணி டீலில் அசத்தியுள்ளது. அவருக்கு குறைந்த தொகை கொடுக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
மும்பை அணியில் கோட்ஸி தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸியை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 5 கோடிக்கு வாங்கியுள்ளது.
வரலாற்றில் முதன்முறை
அதேவேளை ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக 20 கோடிக்கு அதிகமாக வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெயரை கேப்டன் பாட் கம்மின்ஸ் பெற்ருள்ளமை குறிப்பிடத்தக்கது.