பிரித்தானிய இளவரசி ரோயல் இளவரசி அன்னே Anne 2024 ஜனவரி 10 முதல் 13 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை இளவரசி அன்னேவுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் டிம் லோரன்ஸூம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை -பிரித்தானியா இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் அவரது அரச அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.