வெளியானது இலங்கையின் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்!

0
213

இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்று (05.12.2023) வழங்கப்பட்டதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்ட செயலகத்தில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் தலைமையில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வெளியானது இலங்கையின் முதலாவது டிஜிட்டல் பிறப்புச்சான்றிதழ்! | Issues First Digitized National Birth Certificate

இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் விரைவில் ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் உள்ள எண் சர்வதேச தரநிலைகள் மற்றும் நடைமுறைகளின்படி தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணாகவும் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.