எதிர்வரும் ஆண்டு மார்ச் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதல்முறையாக நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் எதிர்வரும் (19.12.2023) ஆம் திகதி துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. மொத்தமாக மினி ஏலத்தில் பங்கேற்க 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய மல்லிகா சாகர் ஐ.பி.எல் ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளார்.