தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்க தீர்மானித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு மகள் சிறுமியாக இருந்தபோது தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமி குழந்தை பிரசவித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரின் தந்தை சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.