அமெரிக்காவின் RM Parks Inc நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
RM Parks Inc உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும்.
அதன்படி, RM Parks Inc மற்றும் Shell இணைந்து இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை உருவாக்கவுள்ளன.
அறிவிப்பு
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 110 மில்லியன் டொலர்கள் என முதலீட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிறிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் EV சார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படும் என இலங்கை முதலீட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.