லியோவையே கதற விட்ட சாண்டியின் புது அவதாரம்!

0
211

சாண்டி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. லியோ படத்தை தொடர்ந்து சாண்டி மாஸ்டரின் புகழ் உச்சமடைந்துள்ளது. கன்னட இயக்குநர் ஷூன்யா இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். ‘ரோசி’ தலைப்பு கொண்ட இந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக உள்ளது.

இந்த முதல் லுக் போஸ்டரில் சாண்டி மாஸ்டர் திருநங்கை போல மிகவும் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சி அளித்துள்ளார். இந்த படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் லியோ படத்தை விட பயங்கரமா இருக்கே என்று கருத்துக்கூறி வருகின்றனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடும்.