சர்ச்சைக்குரிய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் தொடர்பாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், விமான நிலையத்திலோ அல்லது வேறு எங்கும் வந்தாலோ அவரை கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் (தலைவர்) நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரைஸ் ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், நாட்டுக்கு அவர் திரும்பி வந்த பின்னர் 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.