செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை நிர்வகிக்கும் நோக்கில் AI பாதுகாப்பு உச்சி மாநாடு..

0
263

இங்கிலாந்தில் உள்ள பிளெட்ச்லி பூங்காவில் நடைபெற்ற AI பாதுகாப்பு உச்சி மாநாட்டில், சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 25 க்கும் மேற்பட்ட பிற நாடுகளின் பிரதிநிதிகள் AI உடன் தொடர்புடைய சவால்களை கூட்டாக எதிர்கொள்ள பகிரப்பட்ட ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர்.

தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட இவ்வுச்சிமாநாட்டில், AI இன் விரைவான முன்னேற்றம் மற்றும் அது முன்வைக்கும் அபாயங்களைக் கையாள்வதே முதன்மை நோக்கமாக இருந்துள்ளது.

இந்நிகழ்ச்சி நிரல் பொதுவான அபாயங்களைக் கண்டறிதல், அறிவியல் புரிதலை மேம்படுத்துதல் மற்றும் இந்த சாத்தியமான சிக்கல்களை தீர்த்தல் போன்றவற்றை மையமாக கொண்டமைந்துள்ளது.

AI பாதுகாப்பில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், சர்வதேச நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கும் சீனாவின் அர்ப்பணிப்பை சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் துணை அமைச்சரான Wu Zhaohui வெளிப்படுத்தியுள்ளார்.

பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் AI இன் தாக்கம் தொடர்பான கவலைகளையும் உச்சிமாநாடு ஆராய்ந்துள்ளதுடன், “எல்லைப்புற AI” என்று குறிப்பிடப்படும் மிகவும் திறமையான பொது-நோக்க மாதிரிகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவுள்ளது.