ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

0
315

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ண போட்டியின் 39 ஆட்டம் இன்றைய தினம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையெ இடம்பெற்றது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்ட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்களை பெற்றது.

மேக்ஸ்வெலின் அசுரத்தனமான ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி! | Australia Defeating Afghanistan Icc World Cup 2023

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட்  2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், க்ளென் மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மேக்ஸ்வெலின் அசுரத்தனமான ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி! | Australia Defeating Afghanistan Icc World Cup 2023

இந்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ஓட்டங்கள் எடுத்தார்.

மேக்ஸ்வெலின் அசுரத்தனமான ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி! | Australia Defeating Afghanistan Icc World Cup 2023

கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் அடங்கலாக 201 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன்-உல்-ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மேக்ஸ்வெலின் அசுரத்தனமான ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி! | Australia Defeating Afghanistan Icc World Cup 2023