மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பும் முல்லைத்தீவு ஆசிரியர்..

0
174

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், வகுப்பில் மாணவிகளுடன் அநாகரீகமாக நடப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பாடசாலை அபிவிருத்திச்சங்கம், குறிப்பிட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்யுமாறு வலயக்கல்விப் பணிமனையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

போதிய நடவடிக்கையெடுக்கவில்லையென பெற்றோர்கள் குற்றம்

குறித்த ஆசிரியர் ஆபாச குறுந்தகவல்களை மாணவிகளுக்கு அனுப்பியுள்ளதாக பெற்றோர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

பிறந்தநாளில் இனிப்பு கொடுக்கச்சென்ற மாணவியிடம், ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டதாக மாணவியினால் ஆசிரியைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதிபரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை மானவைகளுக்கு ஆசிரியரின் ஆபாச குறுந்தகவல்கள் தொடர்பில் அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தபோது , அதிபர் இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கையெடுக்கவில்லையென பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆசிரியர்மீது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள்

ஆபாச தகவல் அனுப்பியமை தொடர்பில் மாணவியினால் அதிபருக்கு எழுத்துமூல அறிவிப்பு செய்யப்பட்டதாகவும், இது குறித்து வலயக்கல்வி பணிமனையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு கலந்துரையாடலிலும் குறித்த ஆசிரியர்மீது பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பும் முல்லைத்தீவு ஆசிரியர்; கடும் கோபத்தில் பெற்றோர்! | Pornography For Schoolgirls Angry Parents

இந்நிலையில் மாணவர்களுக்கு நல்வழி காட்டவேண்டிய ஆசிரியரே இவ்வாறு நடந்து கொள்வது தமிழர் பகுதியில் வெட்ககேடான செய என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன், சந்தேகநபரான ஆசிரியர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.