முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு..

0
345

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு அவர் கோரியுள்ளார்.

புதிய நிர்வாகக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இதேவேளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாகக்குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய இடைக்கால நிர்வாகக் குழு

2022ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல்கள், முறைகேடுகள் மற்றும் கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | An Invitation To Ex Cricketers

இந்தநிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி, புதிய இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதாக குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.