ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்; தம்மிக்க பெரேரா அறிவிப்பு

0
199

ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். அண்மையில் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே இதனை கூறினார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம். எவ்வாறாயினும் மொத்த வாக்குகளில் குறைந்தது 51 வீதமான வாக்குகளைப் பெறுவது உறுதியானால் மாத்திரமே தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்.

நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி. எனவே தம்முடைய வேட்புமனுவை பெரும்பான்மைக் கட்சிகள் ஏற்றுக்கொண்டால் னது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு கணிசமான அளவு வலுசேர்க்கும்” எனவும் தெரிவித்தார்.