ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மீரிகம விகாரையில் விகாராதிபதியை சந்திப்பதற்காக வந்திருந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எப்போதும் ஒரே மாதிரியான தலைமைத்துவங்கள் இருக்க கூடாது. தலைமைத்துவம் என்பது மாற்றமடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள்
இந்த நிலையில் நாட்டில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மகிந்தவிடம் ஊடகவியலாளர் வினவிய போது,
கருத்து வெளியிடும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளம் என்பது நல்லதை கொண்டுள்ளது கெட்டதையும் கொண்டுள்ளது.
கட்டுப்படுத்துவதால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.