ஷாஃப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவு

0
514

பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தோண்டியெடுக்கப்பட்ட தொழிலாதிபர் தினேஷ் ஷாஃப்டரின் உடலை, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் இந்த உத்தரவினை கொழும்பு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பிறப்பித்துள்ளார்.

குறித்த சடலம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் சகோதரர் ரமேஷ் ஷாப்டர் மற்றும் இறந்தவரின் மைத்துனர் ஜேம்ஸ் மேத்யூ ஆகியோரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.