இன்று பலருக்கும் சாதாரண நெஞ்சுவலிக்கும், மாரடைப்பினால் ஏற்படும் நெஞ்சுவலிக்கும் வித்தியாசம் தெரியவதில்லை. தற்போது எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாரடைப்பு என்பது தற்போது இளம்வயதினரிடையே அதிகமாக வருகின்றது. ஆனால் சாதாரண நெஞ்சுவலிக்கும் மாரடைப்பிற்கும் ஏறக்குறைய ஒரே அறிகுறிகள் காணப்படுவதால் சில தருணத்தில் குழப்பம் ஏற்படுகின்றது.
பொதுவாக அறிகுறிகள்
நெஞ்சு வலி, மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான வியர்வை மற்றும் படபடப்பு சில சமயங்களில் இவை இரண்டும் சேர்ந்தாற் போல் வரும்.
இரண்டிற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் : நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது, தூங்கும் போது சாதாரண நெஞ்சுவலி ஏற்படலாம். ஆனால் மாரடைப்பு என்பது நீங்கள் அதிகப்படியான உழைப்பை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ஏற்படும்.
நெஞ்சுப் பகுதியில் மட்டுமின்றி உடல் முழுவதும் வலி இருக்கும். பெரும்பாலானோருக்கு கைப்பகுதி, கழுத்து அல்லது தாடைப் பகுதியில் வலி இருக்கும்.
இதுவே சாதாரண நெஞ்சுவலி என்றால், கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்துவிடும். ஆனால் மாரடைப்பில் வலி குறையாது என்கின்றனர் மருத்துவர்கள்.
சாதாரண நெஞ்சுவலியை எப்படி சமாளிப்பது?
ஒருவேளை உங்களுக்கு சாதாரண நெஞ்சுவலி ஏற்பட்டால், பதட்டம் அடையாமல் நன்றாக மூச்சை இழுத்துவிடுவதுடன், உங்களது கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும்.
உங்களுக்கு பிடித்தமான, உங்களுக்கு உத்வேகம் தரக்கூடிய 3 நேர்மறையான விஷயங்கள் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.
மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு போன் செய்து அழைக்கவும். ஆஸ்ப்ரின் மாத்திரையை உடனடியாக மென்று விழுங்கினால் ரத்தம் உறைவதை தடுக்கும்.
மாரடைப்பின் போது இந்த மாத்திரை சாப்பிடுவதால் உங்கள் இதயம் மேலும் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
ஆனால் உங்களுக்கு குறித்த மாத்திரை ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் மருத்துவரை அணுகாமல் குறித்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டாம்.