மிகப் பெரியளவில் மோசடிகளை செய்து சட்டவிரோதமாக பணத்தை சம்பாதித்து வெளிநாடுகளில் வைப்புச் செய்துள்ள நபர்களிடம் இருந்து அந்த பணத்தை மீண்டும் அறவிடுவதை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடன் இணைந்து செயற்பட உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதால், ஊழலுடன் தொடர்புடைய நபர்கள் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடைக்கும்.
இலங்கை பல்வேறு தரத்தில் உள்ள நபர்கள் கொள்ளையிட்ட சொத்துக்களை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கி, போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.