ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வசதியின் கீழ் தண்டவாளங்கள் கையளிப்பு

0
220

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 2 பில்லியன் ரூபாவிற்கு அதிகம் பெறுமதியான தண்டவாளங்கள் இரயில்வே திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. நான்கு வருடங்களின் பின்னர் குறித்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி சீனாவில் இருந்து இரண்டு வகையான 10,000 இரயில் தண்டவாளங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே கரையோர மார்க்கம் புனரமைக்கப்படாமையினால் இரயில்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.