யாழில் அதிர்ச்சி சம்பவம்: 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளை கும்பல்!

0
366

யாழில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட்புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நகைகள், பெரும் தொகை பணம், மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் இன்றையதினம் (29-08-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யாழில் அதிர்ச்சி சம்பவம் : 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளை கும்பல்! | Gang Of Robbers Held Knife Child S Neck In Jaffna

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்த கொள்ளையர்கள்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீடொன்றில் கணவன், மனைவி, இரண்டு சிறுபிள்ளைகள் இருந்த நிலையில் வீட்டின் கதவினை உடைத்து முகமூடி அணிந்து உட்புகுந்து பிறந்து 4 மாதமேயான குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துள்ளனர்.

யாழில் அதிர்ச்சி சம்பவம் : 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளை கும்பல்! | Gang Of Robbers Held Knife Child S Neck In Jaffna

இதன்போது வங்கி புத்தகங்கள், 3 பெறுமதியான தொலைபேசிகள், 11 பவுண் நகை, 2 லட்சம் ரூபா காசு என்பவற்றை கொள்ளையடித்து பின்னர் பொலிஸாருக்கு அறிவித்தால் பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்து வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து இது மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.