யாழில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் அத்துமீறிய அதிகாரி..

0
410

யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இளம்பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகாரிக்கு இடமாற்றம்

பலாலி பொலிஸ் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

அவர் சனிக்கிழமை (26) துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும்  அது தொடர்பில்   குறிப்பேட்டில் ஒரு குறிப்பை வைத்திருந்ததாக பொலிஸ் தகவல்களில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரான அதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.