லிவிங் டூ கெதர்; பறிபோன பெண்ணின் உயிர்..

0
257

இந்தியாவில் காதலியை குக்கரால் தாக்கி காதலன் கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29) என்பவரும் தேவா (24) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

பெங்களூரில் வசித்து வந்த இருதவரும் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து காதலர்கள் இருவரும் முறையாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் உறவில்  ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்

லிவிங் டூ கெதர் – வைஷ்ணவ் சந்தேகம்

நிலையில் தேவாவின் நடத்தையில் வைஷ்ணவ் சந்தேகம் அடைந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. நேற்று முன்தினமும்(27) அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு உருவானது.

ஆத்திரம் அடைந்த வைஷ்ணவ் வீட்டில் இருந்த குக்கரை எடுத்து காதலியை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் தேவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து தேவாவின் சகோதரி அவரது தொலைபேசிக்கு அழைப்பு மேற் கொண்டும் தொடர்பு கொள்ளமுடியாததால் சந்தேகம் அடைந்த அவர் தேவாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவரை தொடர்பு கொண்டதை அடுத்து வைஷ்ணவ் வீட்டு கதவை தட்டினார்.

ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் இது பற்றி அவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியள்ளார். பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தேவா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் தலைமறைவான வைஷ்ணவை பொலிஸார் தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.