தூங்கும் நிலையை வைத்து ஒருவரின் குணங்களை கணிக்க முடியுமா?

0
367

பொதுவாக ஒருவர் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் யார் என்பதனை சமூகத்திற்கு பிரதிப்பலிக்கின்றது.

அந்த வகையில், முழு பின்புறத்தையும் படுக்கையில் இருக்குமாறு மல்லாந்து தூங்குபவர்கள் சமூக சூழ்நிலைகளில் வெளியே வந்து உறுதியானவர்களாக இருப்பார்கள்.

இது போன்ற சுவாரஸ்யமான விடயங்களை தெரிந்து கொள்வதால் உடலுக்கு தேவையான சில ஆரோக்கியங்களும் கிடைக்கின்றன.

இதன்படி, ஒருவரின் படுக்கை நிலையும் அதன் பலன்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

ஒருவரின் படுக்கை நிலை

1. மல்லாந்து படுத்தல்

ஒருவர் மல்லாந்து விட்டத்தை பார்த்தப்படி தூங்குகிறார் என்றால் அவர்கள் அமைதியான, வலிமையான நபராக இருப்பார்கள். உண்மையானவர்களாக இருப்பார்கள், எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகவே இவர்களிடம் இருக்கும்.

அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் நம்பிக்கை தவறாமல் இருப்பார்கள். வலுவான ஆளுமை திறன் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வாழ்க்கையில் எல்லையை காணும் தைரியம் இவர்களுக்கு இருக்கும்.

தூங்கும் நிலையை வைத்து ஒருவரின் குணங்களை கணிக்க முடியுமா? தெரிஞ்சிக்கோங்க | Position You Sleep Revels Your Personalit

2. கருவிலுள்ள குழந்தை போன்று உறங்குதல்

குழந்தைபோல் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் கடினமானவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கூச்சம் அதிகமாக இருக்கும். நாற்ப்பட்ட கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உணர்ச்சி வசமான நபர்கள் தான் இப்படி தூங்குவார்களாம். இதனை ஆராய்ச்சிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது. சுயமதிப்பு அதிகமாக இருக்கும், வெளியில் பேசும் போது வெளிப்படையாக இருப்பார்கள்.

தூங்கும் நிலையை வைத்து ஒருவரின் குணங்களை கணிக்க முடியுமா? தெரிஞ்சிக்கோங்க | Position You Sleep Revels Your Personalit

3. குப்புற படுத்தல்

குப்புற படுப்பவர்கள் வயிற்றின் மேல் தூங்குகிறார்கள். இவர்கள் நாற்ப்பட்ட கலைகளில் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். சுதந்திர மனப்பான்மையை கொண்டிருப்பார்கள்.

விமர்சனங்களை அதிகாரப்பூர்வமாக கையாள நினைப்பார்கள். தனிநபராக சாதிக்க விரும்புவார்கள், மனக்கிளர்ச்சி, பாதுகாப்பின்மை அல்லது நம்பிக்கையின்மை ஆகியவற்றை கொண்டிருப்பார்கள். எதிர்மறை உணர்ச்சிகளையும் மறைக்க வல்லவராக இருப்பார்கள்.

தூங்கும் நிலையை வைத்து ஒருவரின் குணங்களை கணிக்க முடியுமா? தெரிஞ்சிக்கோங்க | Position You Sleep Revels Your Personalit