யாழில் போதகரை மிரட்டி கொள்ளை

0
286

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தேவாலயம் ஒன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது.

யாழில் போதகரை மிரட்டி கொள்ளை | Pastor Was Threatened And Robbed In Jaffna

இதன்போது அருட்தந்தையரின் 30 ஆயிரம் ரூபாய் பணமும் தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.