பிரிட்டனின் இளவரசர் வில்லியம் பசியுடன் இருந்த பொதுமக்களுக்கு burger வாங்கிக் கொடுத்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
லண்டனின் தெற்குப் பகுதியில் உணவு வாகனத்திலிருந்து பர்கர்களை இளவரசர் வில்லியம் வாங்கினார். “Earthshot Burgers” எனும் burgerகளை, “Sorted Food” எனும் YouTube பக்கத்துடன் இணைந்து மக்களுக்கு வழங்கி கொண்டிருந்தார் இளவரசர் வில்லியம்.
சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு
அதேவேளை சென்ற ஆண்டு Earthshot பரிசை வென்றவர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க அவர் அவ்வாறு செய்தார். முக்கியச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர் Earthshot பரிசை அறிமுகப்படுத்தினார்.
burgerகள் வைக்கப்படும் பெட்டியிலிருந்து அவற்றைச் சமைக்கப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்கள், அடுப்பு அனைத்தும் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை என்றும் இளவரசர் கூறினார்.
அதேசமயம் “சுவை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் உணவின் தரம் கண்டிப்பாகச் சிறந்தது” என்றும் இளவரசர் வில்லியம் கூறினாராம்.