இந்த வருடத்தின் கடந்த 28 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 57 நாடுகளைச் சேர்ந்த 1,767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்த தகவலை இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் இலவச தானம்
அதன்படி ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேஷியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதயாராச்சி தெரிவித்தார்.
அதேவேளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் ஒரு கண் அல்லது இரண்டு கண்களாலும் பார்க்க முடியாத எந்தவொரு நபருக்கும் இலங்கை கண் மருத்துவ சங்கம் இலவசமாக கண்களை வழங்க முன்வருவதாகவும் ஜகத் சமன் மாதயாராச்சி தெரிவித்தார்.