நேற்றைய தினம் ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு..!

0
252

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாக தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு பாண்ட்ஸ் பிளேஸில் அமைந்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நேற்றைய தினம் (30.07.2023) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கூட்டமைப்பு

ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு..! | Ranil Basil Slpp

நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் புதிதாக அமைக்க உள்ள கூட்டமைப்பு தொடர்பில் பேசும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

நிமல் லன்சாவின் தலைமையிலான புதிய கூட்டணிக்கு ஜனாதிபதி எந்த ஒரு ஆதரவினையும் வழங்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் கோரியதாக அந்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இந்த புதிய கூட்டணி குறித்த பேச்சு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி அல்லது பசில் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.