“சர்வகட்சிக் கூட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிரணிகளிடம் கோரியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டிய சர்வகட்சிக் கூட்டம் ஏமாற்று நடவடிக்கை என்று எதிரணிகள் விமர்சித்து வருவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “எதிர்க்கட்சிகள் தான் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றார்கள்.
எதிர்க்கட்சிகள்
எனக்கு அப்படியான செயல்களில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை.
எனினும், ஜே.வி.பி. மற்றும் கஜேந்திரகுமாரின் கட்சி தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்சிகள் சர்வகட்சி மாநாட்டுக்கு வந்தமை எமது பயணத்தில் முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
விமர்சனங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டாம் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.